சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி


சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலி
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

உளுந்தூர்பேட்டையில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து மூதாட்டி பலியானாா்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கோவில்பாளையத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் தனது குடும்பத்துடன் அரக்கோணம் பகுதியில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு செல்ல காரில் புறப்பட்டனர். காரில் செல்வம், அவரது தாய் பொன்னம்மாள் உள்பட 7 பேர் பயணம் செய்தனர். சின்னாறு பகுதியை சேர்ந்த அய்யப்பன் என்பவர் காரை ஓட்டினார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் நேற்று காலை 9 மணியளவில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது

இந்த விபத்தில் பொன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். செல்வம் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இவர்கள், உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பொன்னம்மாள் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story