குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி


குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி
x

களக்காட்டில் குளத்தில் மூழ்கி மூதாட்டி பலியானார்.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு கோவில்பத்து மேலகட்டளை தெருவை சேர்ந்தவர் சண்முகம் மனைவி சங்கரம்மாள் (வயது 81). இவருக்கு மனநிலை பாதிப்பு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே நேற்று மாயமான மூதாட்டி சங்கரம்மாள் மேலபடலையர்குளம் குளத்தில் தண்னீரில் மூழ்கியபடி சடலமாக கிடந்தார்.

இதுபற்றி களக்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story