மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை


மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை
x

மூதாட்டி தூக்கு போட்டு தற்கொலை

திருப்பூர்

காங்கயம்,


காங்கயம் அருகே வீரணம்பாளையம், மீனாட்சிவலசு பகுதியை சேர்ந்தவர் சாமியாத்தாள் (70). மூதாட்டியான இவர் கணவர் இறந்து பல வருடங்கள் ஆன நிலையில் வீட்டில் தனியே வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் தனியே வாழ்ந்து வந்த மூதாட்டி மனமுடைந்து நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காங்கயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த காங்கயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

-


Related Tags :
Next Story