முதியோர் இல்லங்கள் உரிமம் பெறுவது அவசியம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மத்திய அரசு மானியம் பெறும் முதியோர் இல்லம் மற்றும் கட்டணமில்லாமல் செயல்படும் முதியோர் இல்லத்தில் சமூக நலத்துறையின் சார்பில் கலெக்டர் வினீத் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு குறித்து அவர் கூறும்போது, 'மூத்த குடிமக்களுக்கு சட்ட ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் செயல்படுத்தப்பட்டு அதற்கேற்ப விதிகளும் வகுக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லம் தனியார் மூலம் செயல்பட்டு வருகிறது. அதில் 320 பேர் தங்கி பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். அனைத்து முதியோர் இல்லங்களும் விரைவில் உரிமம் பெற்று செயல்பட வேண்டும். முதியோர்களுக்கு மருத்துவ உதவிக்காக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் குறித்து இணை இயக்குனருக்கு கடிதம் அனுப்பவும் அறிவுறுத்தப்பட்டது' என்றார்.
ஆய்வில் மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.