அழிந்து வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க வேண்டும்


தினத்தந்தி 28 Feb 2023 12:15 AM IST (Updated: 28 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முட்டையிட கரைக்கு வரும் போது சேற்றில் சிக்கியும், படகுகளில் அடிப்பட்டும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து வருகின்றன. அழித்து வரும் இந்த ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

முட்டையிட கரைக்கு வரும் போது சேற்றில் சிக்கியும், படகுகளில் அடிப்பட்டும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து வருகின்றன. அழித்து வரும் இந்த ஆமைகளை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அழிந்து வரும் இனமாக அறிவிப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை ஆலிவர்ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்வது வழக்கம். மீனவர்களின் நண்பன் என அழைக்கப்படும் இந்த ஆமைகள் கடலில் உள்ள கழிவுகளை தின்று மீன்களின் வளர்ச்சிக்கு உதவி வருகிறது.

இந்த வகை ஆமைகள் அழிந்து வரும் இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆமை முட்டைகளை நரி, நாய் மற்றும் மனிதர்களிடம் இருந்து பாதுகாக்க வனத்துறையினர் பல்ேவறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்த போதிலும் ஆமை முட்டைகள் நாய்கள், நரிகள் எடுத்து சென்று விடுகின்றனர்.

வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கை

மேலும் மனிதர்கள் எடுத்து சென்று உணவுக்காக ஆமை முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க வனத்துறை ஊழியர்களை கொண்டு தனி குழு அமைக்கப்பட்டு முட்டைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் முட்டைகள் கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொரிப்பகத்தில் பாதுகாப்பாக தனித்தனியாக குழி தோண்டி புதைத்து வைக்கப்படுகிறது.41 முதல் 55 நாட்களுக்குள் முட்டைகள் பொரித்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அவற்றை பத்திரமாக கடலில் விடப்பட்டு வருகிறது.

8 ஆயிரத்து 200 முட்டைகள் சேகரிப்பு

கடந்த 1972-ம் ஆண்டு முதல் 50 ஆண்டுகளாக கோடியக்கரையில் முட்டைகள் சேகரிக்கப்பட்டு 10 லட்சம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. இந்த ஆமை குஞ்சுகள் 25 ஆண்டுகள் கழித்து பருவமடைந்து இதே கடற்கரைக்கு மீண்டும் முட்டையிட வரும். கோடியக்கரை முனங்காடு, மணியன் தீவு, ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதிகளில் இருந்து இந்த மாதம் மட்டும் 5 ஆயிரம் ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை 8 ஆயிரத்து 200 முட்டைகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

சேற்றில் சிக்கி உயிரிழந்து வருகிறது

வழக்கமாக ஆண்டுதோறும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்படும். ஆனால் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் கடல் சேறு பல கிலோமீட்டருக்கு பரவி கிடக்கிறது.

இதனால் முட்டையிட கரைக்கு வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கியும், மீனவர் வலையில் சிக்கியும், படகு, கப்பலில் அடிபட்டும் இறந்து விடுவதால் ஆண்டுக்கு, ஆண்டு முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

இதை தடுக்க அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகளை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் கோடியக்கரையை சேர்ந்த சித்திரவேலு கூறுகையில், கோடியக்கரையில் வனத்துறையின் மூலம் ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலிவர் ரெட்லி ஆமை முட்டைகளை சேகரித்து பாதுகாப்பாக பொரிப்பகத்தில் வைக்கப்பட்டு குஞ்சு பொரித்தவுடன் கடலில் விட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை ஆழ்கடல் பகுதியில் இருந்து முட்டையிட கரைக்கு வரும் ஆமைகள் சேற்றியில் சிக்கியும், படகுகளில் அடிப்பட்டும் இறந்து வருகின்றன.

மேலும் மீனவர்களின் வலையிலும் சிக்கி உயிரிழக்கின்றன. இதை தடுக்க மீன்வளத்துறை மற்றும் வனத்துறை மூலம் மீனவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அழிந்து வரும் என ஆலிவர் ரெட்லி ஆமையை பாதுகாக்க வேண்டும். ஆமை முட்டைகளை சேகரிக்க கடற்கரை முழுவதும் களப்பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்றார்.

மீனவர்களின் நண்பன்

கோடியக்கரையை சேர்ந்த அனந்தராமன் கூறுகையில், வனத்துறையின் மூலம் 50 ஆண்டுகளாக ஆலிவர் ரெட்லி ஆமை இனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் ஆமைகள் நாள்தோறும் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. கரையில் கிடக்கும் முட்டைகளை நாய், நரிகள் தின்று விடுகினறன. மீனவர்களின் நண்பன் என அழைக்கப்படும் ஆலிவர் ரெட்லி ஆமை இனத்தை பாதுகாக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்


Next Story