அனைத்து திசைகளிலும் தி.மு.க. கொடி பறக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும்
அனைத்து திசைகளிலும் தி.மு.க. கொடி பறக்க தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று மொரப்பூரில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசினார்.
மொரப்பூர்
கொடியேற்று விழா
தர்மபுரி மேற்கு மாவட்டத்துக்குட்பட்ட மொரப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கட்சி கொடியேற்று விழா, மொரப்பூர் கல்லாவி பிரிவு ரோட்டில் நடைபெற்றது. விழாவிற்கு தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் தலைமை தாங்கினார். மொரப்பூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செங்கண்ணன் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் மனோகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் சென்னகிருஷ்ணன், முல்லை கோபால், ஒன்றிய குழு உறுப்பினர்கள் சசிகுமார், முனியம்மாள் நந்திகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக மக்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக நேரம் உழைத்து வருகிறார். தி.மு.க. தொண்டர்கள் சுய கட்டுப்பாடுடன் கட்சி பணியாற்ற வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற கட்சி தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும்.
கொடி பறக்க...
அனைத்து திசைகளிலும் தி.மு.க. கொடி பறக்க கட்சியினர் உழைக்க வேண்டும். தர்மபுரி மேற்கு மாவட்டம் விரைவில் தி.மு.க.வின் எக்கு கோட்டையாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மாவட்ட துணைச் செயலாளர்கள் மணி, கிருஷ்ணகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், முன்னாள் ஒன்றிய செயலாளர் பார்த்திபன், ஒன்றிய துணை செயலாளர் பழனி, ஒன்றிய அவைத்தலைவர் மகாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சரிதாராஜ், தமிழ் செல்வி ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கலைச்செல்வி சேட்டு, தொப்பம்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் செல்வி, நிர்வாகிகள் திருமால் கமலக்கண்ணன், மேகம் சின்னத்தம்பி, வெங்கடேசன், நவீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் நன்றி கூறினார்.
இதேபோல் கோணம்பட்டி பிரிவு சாலை உள்பட பல்வேறு இடங்களில் அமைச்சர் கொடியேற்றினார். அதில் ஒன்றிய செயலாளர்கள் ரத்தினவேல், சவுந்தரராசு, மாது மற்றும் அரூர் நகர செயலாளர் முல்லைரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.