25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை
25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகையிட போவதாக விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தொண்டி,
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் முத்துராமு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாவட்டத்தில் கடந்த 2022-23-ம் ஆண்டு கடும் வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனம் முறையாக ஆய்வு செய்து இழப்பீடு வழங்காமல் மாவட்டத்தில் 100 வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காமல் விடுபட்டுள்ளது. விடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விவசாயிகள் அனைவருக்கும் பயிர் இழப்பீட்டு தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 25-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில்முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.