குடும்ப பிரச்சினையில்இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு


குடும்ப பிரச்சினையில்இருதரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 14 May 2023 12:15 AM IST (Updated: 14 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் குடும்ப பிரச்சினையில் ஏற்பட்ட இரு தரப்பினர் மோதலில் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தேனி

தேனி கண்ணாத்தாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தன்ராஜன் (வயது 34). இவருடைய மனைவி சூரியகலா. இவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். அவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக சூரியகலா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தனது மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் தனது மனைவி, மகளை பார்ப்பதற்காக கந்தன்ராஜன் தனது மாமனார் வீட்டுக்கு சென்றார்.

அப்போது அவர் தனது மாமனார் கனகராஜனிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கந்தன்ராஜன் தனது வீட்டுக்கு சென்ற நிலையில், கனகராஜன் உள்பட சிலர் அங்கு வந்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் கந்தன்ராஜன், கனகராஜன், சூரியகலா உள்பட 7 பேர் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


Related Tags :
Next Story