குடும்ப பிரச்சினையில் மளிகை கடைக்கு தீவைத்தவர் சிக்கினார்


தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் குடும்ப பிரச்சினையில் மளிகை கடைக்கு தீவைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கே.டி.சி நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மனைவி மாரியம்மாள் (வயது 66). இவர் தூத்துக்குடி கே.டி.சி நகர் ஹவுசிங் போர்டு காலனி பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் மாரியம்மாளுக்கும், அவரது உறவினரான புதியம்புத்தூர் பங்களா தெருவை சேர்ந்த செல்வநாராயணன் மகன் சுந்தரநயினார் என்ற சங்கர் (44) என்பவருக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்து உள்ளது. சம்பவத்தன்று அவர்களுக்கு இடைேயே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தரநயினார் என்ற சங்கர் மாரியம்மாளின் மளிகை கடையை தீ வைத்து எரித்து சேதப்படுத்தினாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து சுந்தரநயினார் என்ற சங்கரை கைது செய்தார்.


Next Story