மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலி
கூடலூரில் மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி விவசாயி பலியானார்
கூடலூர் 14-வது வார்டு எருமைக்கார சாவடி தெருவை சேர்ந்தவர் வீரு பாப்பு (வயது 74). விவசாயி. நேற்று இரவு இவர் மோட்டார்சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்றார். கூடலூர்-குமுளி மெயின்ரோட்டில் பழைய போலீஸ் நிலையம் அருகே சென்றபோது பின்னால் அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பஸ் முந்தி செல்ல முயன்றபோது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீருபாப்பு மகன் பகவதி ராஜ் கூடலூர் தெற்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லாவண்யா அரசு பஸ் டிரைவரான கம்பம் மஞ்சனகார தெருவை சேர்ந்த ஜனார்த்தனன் (50) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.