மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விவசாயி சாவு
வீரபாண்டி அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பரிதபமாக இறந்தார்.
வீரபாண்டி அருகே உள்ள முத்துதேவன்பட்டி அரிஜன காலனி தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 59). விவசாயி. நேற்று முன்தினம் இவர், அதே பகுதியில் தேனி-குமுளி பைபாஸ் ரோட்டில் தனியார் பள்ளி அருகே மோட்டார்சைக்கிளில் சாலையை கடந்து சென்றார். அப்போது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் ராஜா படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாவின் மனைவி குருபாக்கியம் வீரபாண்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவைச் சேர்ந்த கார் டிரைவரான ஜெகநாதன் 61 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்