மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி தொழிலாளி பலி:டிரைவர் கைது
போடி அருகே மோட்டார் சைக்கிள் மீது ஜீப் மோதி தொழிலாளி பலியானார்.
தேனி
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கைலாசநாடு பகுதியை சேர்ந்தவர் பாலன் (வயது 48). கூலித்தொழிலாளி. நேற்று இவர், போடியில் இருந்து மோட்டார்சைக்கிளில் கைலாசநாடுக்கு சென்று கொண்டிருந்தார். போடி மெட்டு மலைப்பாதையில் முந்தல் பகுதியில் முதல் வளைவில் சென்றபோது, எதிரே தோட்ட தொழிலாளர்களை ஏற்றி வந்த ஜீப் இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குரங்கணி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் பாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போடி அருகே உள்ள சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜீப் டிரைவரான முத்து கிருஷ்ணன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story