மோட்டார்சைக்கிள் மீது தனியார் ஆம்னி பஸ் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி


மோட்டார்சைக்கிள் மீது  தனியார் ஆம்னி பஸ் மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலி
x

தேவாரம் அருகே ேமாட்டார்சைக்கிள் மீது தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்

தேனி

தேவாரம் அருகே உள்ள அழகர் நாயக்கன்பட்டி வடக்கு காலனியை சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 32). அதே ஊரை சேர்ந்தவர் சுருளிராஜ் (32). கட்டிட தொழிலாளர்கள். நேற்று இவர்கள் இருவரும் வேலை முடிந்து தேவாரத்தில் இருந்து மோட்டார்சைக்கிளில் அழகர்நாயக்கன்பட்டிக்கு வந்து கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை சுப்புராஜ் ஓட்டினார். சுருளிராஜ் பின்னால் அமர்ந்திருந்தார்.

தேவாரம்-போடி நெடுஞ்சாலையில் லட்சுமி நாயக்கன்பட்டி அருகே சென்றபோது பண்ணைப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார்ஆம்னி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த தேவாரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சுப்புராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சுருளிராஜை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் ஆம்னி பஸ் டிரைவரான நெல்லையை சேர்ந்த இமானுவேல் (40) என்பவரை கைது செய்தனர்.


Next Story