மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை


மேல்முறையீட்டு மனுக்கள் மீது  மாநில தகவல் ஆணையர் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற மேல் முறையீட்டு மனுக்களின் மீது தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.

தேனி

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரப்பெற்ற மேல் முறையீட்டு மனுக்களின் மீது தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் நேற்று விசாரணை நடத்தினார். திண்டுக்கல் மாவட்டத்தில் 10 வழக்குகளும், தேனி மாவட்டத்தில் 30 வழக்குகளும் என மொத்தம் 40 மேல்முறையீட்டு மனுக்கள் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஒவ்வொரு மனுக்களின் தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மனுதாரர்களிடம் மாநில தகவல் ஆணையர் விசாரணை நடத்தி உரிய உத்தரவுகள் பிறப்பித்தார். மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story