டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு
கோவில்பட்டியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் குழந்தைகள் மையம், அங்கன்வாடி, சிலம்ப மாணவ-மாணவிகளுக்கு தீபாவளி இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு நற்பணி மன்ற தலைவர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். துர்கேஷ் நளினி முன்னிலை வகித்தார். நற்பணி மன்ற மாவட்ட துணைத்தலைவர் தவமணி, ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் சீனிவாசன் ஆகியோர் இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கினர்.
நகரசபை கவுன்சிலர் லவராஜா முதியோர்களுக்கு போர்வைகள் வழங்கினார். அங்கன்வாடி பள்ளிக்கு சுவர் கெடிகாரம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிதா பேகம், மேற்பார்வையாளர்கள் அமுதம்மாள், பாலம்மாள், குழந்தைகள் நலப்பணியாளர் சபீனா, சிலம்ப ஆசிரியர்கள் கணபதி, சோலைராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.