டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டி நடத்தப்பட உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியின் கணினித்துறையில் மாணவர்களின் திறமையை வளர்க்கும் பொருட்டு சிவந்தி கம்ப்யூட்டர் அசோஷியேசன் (எஸ்.சி.ஏ.என்.), கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா (சி.எஸ்.ஐ.), இன்ஸ்டிடியூசன் ஆப் என்ஜினீயர்ஸ் (ஐ.இ.ஐ.) மாணவர் சங்கம் இயங்கி வருகிறது. இந்த சங்கம் மாணவர்களின் தொழில்நுட்ப திறமையை வளர்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகிறது.

இந்த மாணவர் சங்கமானது தற்போது பள்ளி மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கும் வகையில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு டிஜிட்டல் புகைப்படம் எடுத்தல் போட்டியை நடத்த உள்ளது.

இந்த போட்டியில் மாணவர்கள் பங்குபெற (https://forms.gle/KW4ChnxGZRc7RZzC9) என்ற இணைப்பின் மூலமாக தங்கள் டிஜிட்டல் புகைப்படங்களை 10 எம்.பி. அளவுக்கு மிகாமல் நாளைக்குள் (சனிக்கிழமை) சமர்ப்பிக்கலாம். இதில் பங்கு பெறும் அனைவருக்கும் இணையவழி சான்றிதழ் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு bhavani@drsacoe.com என்ற மின்னஞ்சல் வழியாகவோ அல்லது 04639 220740 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி தலைமையில் கணினித்துறை பேராசிரியர் பவானி மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் செய்து வருகிறார்கள்.

இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஜி.வைஸ்லின் ஜிஜி தெரிவித்து உள்ளார்.


Next Story