டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கவிதை போட்டி


டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கவிதை போட்டி
x

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கவிதை போட்டி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி எந்திரவியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இணையவழி கவிதை போட்டி நடைபெற உள்ளது. மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை வெளிக்கொணரும் வகையில், 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' மற்றும் 'Let all thy aims be high' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலத்தில் நடத்தப்படவுள்ள கவிதை போட்டியில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம்.

எனவே, மாணவ-மாணவிகள் தங்களது கவிதைகளை வருகிற 12-ந்தேதி (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை https://rb.gy/6myks என்ற இணைப்பு மூலம் சமர்ப்பித்து (ஸ்கேன் செய்து 10 எம்.பி.க்கு மிகாமல்) பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்று கவிதை சமர்ப்பிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இணையவழி சான்றிதழ் வழங்கப்படும்.

இதுகுறித்து மேலும் தகவல்களுக்கு www.drsacoe.org என்ற கல்லூரியின் இணையதளத்திலும், 9445569997 என்ற செல்போன் எண்ணிலும் மாணவ-மாணவிகள் தொடர்பு கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வைஸ்லின் ஜிஜி தலைமையில், எந்திரவியல் துறை தலைவர் மணிராம்குமார் மற்றும் பேராசிரியர்கள் செய்துள்ளனர்.


Next Story