பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில்கடன் வழங்க சிறப்பு முகாம்கள்:8 ஒன்றியங்களிலும் 24-ந்தேதி நடக்கிறது


பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில்கடன் வழங்க சிறப்பு முகாம்கள்:8 ஒன்றியங்களிலும் 24-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 20 Jan 2023 12:15 AM IST (Updated: 20 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பிற்படு்த்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், கடன் வழங்க சிறப்பு முகாம்கள் 8 ஒன்றியங்களில் வருகிற 24-ந்தேதி நடைபெறுகிறது.

தேனி

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்களுக்கு தனிநபர் கடன் மற்றும் குழுக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கடனுதவி வழங்கும் திட்டத்துகான சிறப்பு முகாம்கள் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கடமலை-மயிலை, சின்னமனூர், போடி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் வருகிற 24-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த முகாம்களில் சாதிச்சான்றிதழ், வருமான மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், முன்னணியில் உள்ள நிறுவனத்தின் விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ரேஷன்கார்டு நகல், ஆதார் அட்டை நகல், வங்கிகோரும் அடமானத்துக்குரிய ஆவணங்கள் ஆகியவற்றின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். முகாம்களில் பங்கேற்க முடியாதவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், கூட்டுறவு வங்கிகள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களை வழங்கி பயன்பெறலாம். இத்தகவல் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story