கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில்சர்வதேச மின்னணு கழிவு தின விழிப்புணர்வு ஊர்வலம்


கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில்சர்வதேச மின்னணு கழிவு தின விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 14 Oct 2023 12:15 AM IST (Updated: 14 Oct 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் சர்வதேச மின்னணு கழிவு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி (கிழக்கு):

கோவில்பட்டி கோ. வெங்கடசுவாமி நாயுடு தன்னாட்சி கல்லூரியின் சமூகப் பொறுப்பு திட்டத்தின் கீழ் மின்னணுவியல் துறையும் கோவில்பட்டி நகராட்சியும் இணைந்து மின்னணு கழிவு தின விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின. இந்த ஊர்வலத்தை கோவில்பட்டி காந்தி மைதானத்தில் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் தொடங்கி வைத்தார். அங்கிருந்து எட்டயபுரம் மெயின் ரோடு வழியாக புதிய நகராட்சி அலுவலகத்தில் நிறைவு பெற்றது.

இந்த ஊர்வலத்துக்கு கல்லூரி முதல்வர் சுப்புலட்சுமி, சுயநிதி பாடப்பிரிவுகளின் இயக்குனர் வெங்கடசலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையர் கமலா, மாணவ மாணவிகளிடம் மின்னணு கழிவுகளின் மூலம் ஏற்படக்கூடிய தீமைகளையும் மின்னணு கழிவுகளை எவ்வாறு மறுசுழற்சி செய்வது என்பதை பற்றியும் விளக்கினார்.

இந்த ஊர்வலத்தில் ஆயத்த ஆடை மற்றும் அலங்கார வடிவமைப்பு துறை, புள்ளியல் துறை, ஆங்கிலத்துறை மற்றும் கல்லூரி இயற்கை கழகம் ஆகிய துறையில் இருந்து 150 மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் மின்னணுவியல் துறை தலைவர் சங்கர் கணேஷ், உதவி பேராசிரியர் சிவராம சுப்பு மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story