இந்துமுன்னணி சார்பில்பண்பு பயிற்சி முகாம்
விளாத்திகுளம் அருகே இந்துமுன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவன்நாயகன்பட்டி கிராமத்தில் காமாட்சி அம்மன் கோவிலி வளாகத்தில் இந்து முன்னணி சார்பில் பண்பு பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு சித்தவன்நாயகன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம், டாக்டர் அரசு ராஜா, மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், முத்துக்குமார,் மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேல், மாயகூத்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் செய்திருந்தார்.
Related Tags :
Next Story