இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம்
இந்திய ஜனநாய வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போரட்டம் தேனியில் நடந்தது
தேனி
திருக்குறள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சமீப காலமாக தனது கருத்துகளை தெரிவித்து வருகிறார். இந்நிலையில் திருக்குறள் குறித்து அவரது கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தேனி தபால் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் கவர்னருக்கு திருக்குறள் புத்தகம் அனுப்பும் போராட்டம் நடந்தது. இதற்கு தேனி தாலுகா செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முனீஸ்வரன், தாலுகா நிர்வாகிகள் பால்பாண்டி, பிரகாஷ் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டனர். திருக்குறளை அவமதிக்கும் வகையில் கவர்னர் கருத்து தெரிவித்து வருவதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருக்குறள் புத்தகத்தை அனுப்பியதாகவும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story