கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில் கே.லட்சுமியாபுரத்தில் நாட்டுநலப்பணித்திட்ட முகாம் நேற்று தொடங்கியது. தொடக்க விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை சீத்தா மகேஸ்வரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சிவராமன் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பால்ச்சாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக துரைச்சாமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா சண்முகபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அப்பகுதியில் பஞ்சாயத்து தலைவரும், தலைமை ஆசிரியையும் மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கிராம தெருக்களை சுத்தம் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல் போன்ற பணிகளை செய்தனர்.
முகாமில் கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ் பாண்டியன், லட்சுமியாபுரம் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் காளியப்பன், ஊர் நாட்டாமை சகாதேவன், அரசு பள்ளி ஓவிய ஆசிரியர் கருமலைராஜன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மாரிக்கனி நன்றி கூறினார். முகாம் ஏற்பாடுகளை சண்முகபாண்டியன், குமார் மற்றும் கிராம ெபாதுமக்கள் செய்திருந்தனர்.