கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அரசு செலவில் 3 நாட்கள் கல்வி சுற்றுலா: 650 மாணவ, மாணவிகள் தேர்வு


கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில்  அரசு செலவில் 3 நாட்கள் கல்வி சுற்றுலா:  650 மாணவ, மாணவிகள் தேர்வு
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அரசு செலவில் 3 நாட்கள் கல்வி சுற்றுலா செல்ல 650 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தேனி

கள்ளர் சீரமைப்புத்துறை சார்பில் அரசு கள்ளர் பள்ளிகளில் பிளஸ்-1 படிக்கும் மாணவ, மாணவிகளின் அறிவை வலுவூட்டும் விதமாக 3 நாட்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல அரசு உத்தரவிட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் இருந்து ராமேசுவரம், திருமயம், மதுரை போன்ற பகுதிகளுக்கு 3 நாட்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர். அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி உள்பட 10 பள்ளிகளை சேர்ந்த 650 மாணவ, மாணவிகள் இதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2 பகுதியாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். முதற்கட்டமாக நேற்று முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரையும், 2-வது கட்டமாக நாளை மறுநாள் முதல் 9-ந்தேதி வரையும் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.


Next Story