கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சின்னசேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு நடைபயணம் இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்ற கோரிக்கை


கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில்  சின்னசேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு நடைபயணம்  இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்ற கோரிக்கை
x
தினத்தந்தி 12 Oct 2022 12:15 AM IST (Updated: 12 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

இருவழி சாலையை 4 வழி சாலையாக மாற்ற கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினா் சின்னசேலத்தில் இருந்து உளுந்தூர்பேட்டைக்கு நடைபயணம் மேற்கொண்டனா். க்கை

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் சில இடங்களில் 4 வழி சாலையாகவும், சில பகுதிகளில் இருவழி சாலையாகவும் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இந்த இருவழி சாலைகள் முழுவதையும் 4 வழி சாலையாக மாற்றி அமைத்திட வேண்டும், அதுவரை இந்த பகுதியில் உள்ள சுங்கச்சாவடிகள் சுங்க கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாநில இளைஞரணி செயலாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடைபயணம் நடைபெற்றது. சின்னசேலம் மூங்கில்பாடி பிரிவு சாலையில் இருந்து தொடங்கிய இந்த நடைபயணம் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story