நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்


தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் இறந்து போனவர்களின் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவில்பட்டி தேர்தல் ‌பிரிவு சார்பில் நாலாட்டின்புத்தூர் நேஷனல் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தொடங்கிய ஊர்வலத்தை தேர்தல் பிரிவு துணை தாசில்தார் சங்கரநாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தி கோஷமிட்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோவில்பட்டி மெயின் ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக சென்று உதவி கலெக்டர் அலுவலகத்தில் நிறைவடைந்தது. தொடர்ந்து வாக்குரிமை குறித்தும் அதன் அவசியத்தை பற்றியும் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் இசக்கிராஜ் பேசினார். இதில் வருவாய் அலுவலர் ராஜசேகர் மற்றும் வருவாய் துறையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story