நாசரேத் ஜேம்ஸ் பள்ளி சார்பில் பசுமை விழிப்புணர்வு ஊர்வலம்


நாசரேத் ஜேம்ஸ் பள்ளி சார்பில் பசுமை விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 15 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 3:02 PM IST)
t-max-icont-min-icon

நாசரேத் ஜேம்ஸ் பள்ளி சார்பில் பசுமை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

நாசரேத் ஜேம்ஸ் மெமோரியல் மேல்நிலை பள்ளியில் பசுமை விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. 'பசுமையை நோக்கி ' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். எஸ்.டி.ஏ. பள்ளிகளின் தெற்கு மண்டல ஆய்வாளர் தங்கராஜ் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் எட்வின் சாமுவேல், தலைமை ஆசிரியர் அய்யாவு ஜோசப், பள்ளி பொருளாளர் சுவிசேஷமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி நாசரேத் காமராஜர் பஸ் நிலையத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவ, மாணவியர் ' மரங்களை நடுவோம் மழை பெறுவோம்' 'மரங்களை வெட்டாதீர், பசுமையை காப்போம்' போன்ற வாசகங்களை கொண்ட பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராய்ஸ்டன், வைகுண்டதாஸ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story