பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினவிழா


தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் உலக சுகாதார தினவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரியின் சமூக நலப்பிரிவு செவிலியர் துறை சார்பில் மேலப்புதுக்குடி சமூகநல மையத்தில் உலக சுகாதார தினவிழா கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் கலைக்குருச்செல்வி வழிகாட்டுதலின்படி நடந்த இந்த நிகழ்ச்சியில் இணை பேராசிரியை சங்கீதா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தனராக டாக்டர் லஷ்மிகாந்த் கலந்து கொண்டு, அனைவரும் சுகாதாரத்தை பெறுவதற்கு பொதுமக்களின் கடமை, அதற்கான வழிமுறைகள் குறித்து பேசினார். கல்லூரி 2-ம் ஆண்டு மாணவிகள் பவித்ராதேவி, மோனிகா ஷேரன் ஆகியோர் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளையும், தவிர்க்க வேண்டிய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளையும் விளக்கும் வகையில் காட்சி அட்டை மூலம் பொதுமக்களுக்கு விளக்கி கூறினர். கல்லூரியின் களபயிற்சி ஆசிரியர் டினுஷா செல்லம் நன்றி கூறினார்.

இதேபோன்று திருச்செந்தூர் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரியின் மாணவ செவிலியர் சங்கமும், மகப்பேறியல் மற்றும் மகளிர் செவிலியர் துறையும் இணைந்து தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரசவ வார்டு அருகே உள்ள அரங்கத்தில் தேசிய தாய்மை பாதுகாப்பு தின விழாவை நடத்தின. நிகழ்ச்சியில் கல்லூரி இணை பேராசிரியை மற்றும் மாணவ செவிலிய சங்க ஒருங்கிணைப்பாளர் சுமதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பி.முத்துபிரபா கலந்து கொண்டு பேசினார். அப்போது, கற்பக்காலத்திலும், பிரசவத்தின் போதும், பிரசவத்திற்கு பிறகும் தாய்மார்கள் பாதுகாப்பான சிகிச்சை முறைகளை பின்பற்றும் வழிமுறைகள் குறித்து பேசினார்.

பின்னர், 4-ம் ஆண்டு மாணவிகள் கற்பகால கவனிப்பு முறைகள், பிரசவகால கவனிப்பு முறைகள், பிரசவத்திறகு பிந்தய கவனிப்பு முறைகள், குடும்ப கட்டுப்பாடு முறைகள், கருகலைப்பிற்கு பின் மேற்கொள்ள வேண்டிய கவனிப்பு முறைகள், பால்வினை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முறைகள் குறித்து சுவரொட்டிகள், விளக்க அட்டைகள் மற்றும் கற்றல் உதவி அட்டைகள் மூலம் தாய்மார்களுக்கு விளக்கி கூறினர். இதில், கற்பிணி பெண்கள் மற்றும் பிரசவமான தாய்மார்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிகளை கல்லூரி களப் பயிற்சியாளர்கள் புஷ்பலதா, முத்துஇருளாயி, சுஜி ஆகியோர் தொகுத்து வழங்கினர். களப் பயிற்சியாளர் காயத்ரி நன்றி கூறினார்.


Next Story