தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில்மியாவாக்கி மாடல் பூங்கா அமைக்க ரூ.21¾ லட்சம் நிதியுதவி
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் பகுதியில் மியாவாக்கி மாடல் பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில்ரூ.21¾ லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 530 கிளைகள், 12 மண்டல அலுவலகங்களின் மூலம் சுமார் 50 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. இந்த வங்கி சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சங்கர் நகர் பகுதியில் மியாவாக்கி மாடல் பூங்கா அமைப்பதற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சமூக பொறுப்பு நிதி வழங்கி உள்ளது. இதற்கான ரூ.21 லட்சத்து 80 ஆயிரத்துக்கான காசோலையை தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலக திட்டமிடல் துறை துணை பொது மேலாளர் பி.அசோக்குமார், தூத்துக்குடி மண்டல மேலாளர் ஜே.சுந்தரேஷ்குமார் ஆகியோர் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியிடம் நேற்று வழங்கினர். அப்போது வங்கி அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.