தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில்பிரதமருக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம்


தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில்பிரதமருக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம்
x

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரதமருக்கு தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நடந்தது.

தூத்துக்குடி

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அதானி தொடர்பான 3 கேள்விகள் அடங்கிய தபால் கார்டை பிரதமருக்கு அனுப்பும் போராட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தபால் கார்டு அனுப்பும் போராட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமை தாங்கி, தூத்துக்குடி தலைமை தபால் அலுவலகத்தில் தபால்கார்டுகளை தபால் பெட்டியில் போட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் பலரும் கையெழுத்திட்டு தபால் கார்டுகளை பெட்டியில் போட்டனர்.

இதில் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜான்சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story