தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில்இந்திய ஒற்றுமை நடைபயண நிறைவு விழா கொண்டாட்டம்
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய ஒற்றுமை நடைபயண நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயண நிறைவு விழா கொண்டாட்டம் பழைய பஸ் நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சிக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர், ஐ.என்.டி.யு.சி மாநில பொதுச்செயலாளர், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.பெருமாள்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட முன்னாள் தலைவர் முத்துக்குட்டி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், அமைப்புசாரா தொழிலாளர் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயக்கொடி, தெற்கு மண்டல தலைவர் தங்கராஜ், மாநில பேச்சாளர் அம்பிகாபதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்துவிஜயா, வர்த்தக பிரிவு மாநகர தலைவர் ஏ.ஜே.அருள்வளன், மாநகர் செயலாளர் இக்னேஷியஸ், ஐ.என்.டி.யு.சி. முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story