தூத்துக்குடியில்தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி


தூத்துக்குடியில்தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
x
தினத்தந்தி 11 Aug 2023 6:45 PM GMT (Updated: 11 Aug 2023 6:45 PM GMT)

தூத்துக்குடியில்தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தொல்லியல் துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி நேற்று நடந்தது.

கட்டுரை போட்டி

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா கட்டுரைப் போட்டி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. 'பண்டைய தமிழ்ச் சமூகம்' என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது. போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சாந்தினி கவுசல் வரவேற்று பேசினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் கணேசன், இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருணாசல சுந்தரம், மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒருங்கிணைப்பாளர் முனியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கட்டுரை போட்டியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரான வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் மற்றும் சுப்பையா வித்யாலயம் மாணவிகள் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியைகள் சோபனா, முத்து கல்யாணி ஆகியோர் போட்டியை நடத்தினர். போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 75 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

பரிசு

போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பாக சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. மாநில அளவில் தேர்வு செய்யப்படும் கட்டுரைக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாவது பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பெறும் கட்டுரையாளர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி தலைமையில் அலுவலர்கள், ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.


Next Story