அஞ்சல் துறை சார்பில், கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-தர்மபுரியில் 27-ந் தேதி நடக்கிறது


அஞ்சல் துறை சார்பில், கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்-தர்மபுரியில் 27-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 13 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-14T16:14:17+05:30)

அஞ்சல் துறை சார்பில், கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரியில் 27-ந் தேதி நடக்கிறது.

தர்மபுரி

தர்மபுரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான ஓய்வூதியர்கள் சார்ந்த குறை தீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தலைமை அஞ்சலக வளாகத்தில் வருகிற 27-ந் தேதி பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சலக ஓய்வூதியர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் தங்கள் புகார்களை பென்சன் அதாலத் என்று தபால் உறையின் மீது எழுதி அஞ்சல் துறை கண்காணிப்பாளர், தர்மபுரி கோட்டம், தர்மபுரி-636701 என்ற முகவரிக்கு வருகிற 23-ந் தேதிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். ஓய்வூதியர்கள், ஓய்வூதிய கணக்கு எண், ஓய்வூதியம் தொடர்பான பிற விவரங்கள் அனைத்தையும் முழுமையாக குறிப்பிட வேண்டும். அனுப்பும் புகார்களில் ஓய்வூதியம் தொடர்பான குறைகளை முழுமையான விவரங்களுடன் குறிப்பிட்டு எழுத வேண்டும். புகார் கடிதங்களை குறித்த நேரத்தில் அஞ்சல் துறை கண்காணிப்பாளர் அலுவலக முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். சட்ட ரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசின் கொள்கைகள் சார்ந்த குறைகளை தவிர்க்குமாறு ஓய்வூதியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story