இந்து அன்னையர் முன்னணி சார்பில்கோவில்களில் சிறப்பு வழிபாடு
உடன்குடி பகுதியில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி அருகிலுள்ள தைக்காவூர், விஜயநாராயணபுரம் அம்மன்புரம், சீர்காட்சி சோலைகுடியிருப்பு, வீரவாகுபுரம் உளளிட்ட 9 கிராமங்களில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடக்கவும், கன மழை பொழிந்து ஆறு, குளங்கள் நிரம்ப வேண்டியும் இந்த வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் சூரியகலா, தமிழ்ச்செல்வி, யோகேஸ்வரி, அமுதசுரபி, வனசுந்தரி, செல்வகுமாரி, அமுதா, சுஜாதா, கோகிலா, பட்டு ரோஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story