விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம்
x
தினத்தந்தி 7 Nov 2022 12:15 AM IST (Updated: 7 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.

தேனி

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பொதுமக்களுக்கு மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்தார். இந்த புத்தகம் பெண்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் இழிவுபடுத்துவதாகவும், அதனால், மக்களுக்கு அதை எடுத்துக் கூறும் வகையில் இந்த புத்தகம் வினியோகம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி, தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி தேனி பழைய பஸ் நிலையத்தில் நேற்று தொடங்கியது. கிழக்கு மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கி பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், வணிக நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் ஆகியோருக்கு இந்த புத்தகத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்புவடிவேல், மாநில துணைச்செயலாளர் இளமதி, மாவட்ட துணைச்செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லத்தம்பி, நகர செயலாளர் ஈஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story