விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்தொழிலாளர் தினவிழா
குரும்பூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொழிலாளர் தினவிழா நடந்தது.
தென்திருப்பேரை:
குரும்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தின விழா, தொழிலாளர் தின விழா மற்றும் கால்டுவெல் நினைவு தின கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தை கட்சி பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் சோசு தமிழ் இனியன், மாவட்ட பொருளாளர் சீபா பாரிவள்ளல், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் வெற்றி வேந்தன், மாவட்ட மகளிர் அணி துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி, காங்கிரஸ் கட்சி மாவட்ட பொதுச் செயலாளர் சுதாகர், நகரச் செயலாளர் ஐயப்பன், ஒன்றிய செயலாளர்கள் சங்கர் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.