விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்


விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்
x
தினத்தந்தி 4 May 2023 12:15 AM IST (Updated: 4 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு 10 அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர் 332 பேருக்கு பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் சங்க தமிழன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் இம்மானுவேல் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்

விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான சிந்தனை செல்வன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கி அம்பேத்கர் ஆற்றிய தொண்டுகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில் மண்டல செயலாளர் தமிழினியன், மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன், மாவட்ட பொருளாளர் சி.பா. பாரிவள்ளல், தொகுதி செயலாளர்கள் வெற்றிவேந்தன், திருவள்ளுவன், ஒன்றிய செயலாளர்கள் தமிழ்வாணன், சிவகுருநாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story