செஞ்சிலுவை சங்கம் சார்பில் முப்பெரும் விழா


செஞ்சிலுவை சங்கம் சார்பில் முப்பெரும் விழா
x

தேனியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.

தேனி

தேனியில் இந்திய செஞ்சிலுவை சங்கம், ஜூனியர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவை சார்பில் உலக செஞ்சிலுவை சங்க தின விழா, செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் சங்கமிக்கும் விழா, புரவலர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

விழாவுக்கு தேனி மாவட்ட செஞ்சிலுவை சங்க தலைவர் டாக்டர் தியாகராஜன் தலைமை தாங்கினார். கவுரவ செயலாளர் சுருளிவேல் வரவேற்றார். இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு புரவலர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்கள் வழங்கி பாராட்டினார். விழாவில் செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஜூனியர் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story