தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு குளிர்பதன பெட்டி


தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில்  மீனவர்களுக்கு குளிர்பதன பெட்டி
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு குளிர்பதன பெட்டி வழங்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தொடர்ந்து சமுதாய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி மீனவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்துக்காக, கடந்த மாதம் சில்லறை மீன் வியாபாரம் செய்து வரும் மீனவர்களுக்கு மீன் விற்பனைக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக திரேஸ்புரம், லூர்தம்மாள்புரம், அண்ணா காலனி உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த மீனவர்க்ள நாட்டுப்படகில் சென்று மீன்பிடிக்கும் போது மீன்களை சேகரித்து வைக்க தேவையான குளிர் பதன பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் காப்பர் முதன்மை நிதி அலுவலர் ஆனந்த் சோனி கலந்து கொண்டு 27 மீனவர்களுக்கு குளிர்பதன பெட்டிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் இறால் மீன்பிடி சங்கம் சம்சுதீன், யாசீர் மற்றும் மீனவர்கள் மற்றும் ஸ்டெர்லைட் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story