திருச்செந்தூர் கோவிந்தம்மாள்ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில்மாநாடு தண்டுபத்தில் அமுதப் பெருவிழா


திருச்செந்தூர் கோவிந்தம்மாள்ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில்மாநாடு தண்டுபத்தில் அமுதப் பெருவிழா
x
தினத்தந்தி 16 Aug 2023 12:15 AM IST (Updated: 16 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் கோவிந்தம்மாள்ஆதித்தனார் மகளிர் கல்லூரி சார்பில் மாநாடு தண்டுபத்தில் அமுதப் பெருவிழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அணி எண்கள் 49, 50 மற்றும் மாநாடு தண்டபத்து பஞ்சாயத்தும் இணைந்து 76-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, "எனது மண், எனது நாடு" என்ற கருப்பொருளில் மரக்கன்று நிகழ்ச்சியினை தண்டுபத்து நரிக்குளத்தில் நடத்தியது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி வழிகாட்டுதலின்படி, கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவிகள் மாநாடு தண்டபத்து பஞ்சாயத்தை சார்ந்த நரிக்குளம் பகுதியில் பல்வேறு வகையான பழ மரங்களை நட்டு, அமுதப் பெருவ்விழாவை கொண்டாடினர். விழாவில் தண்டபத்து பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணம்மாள், துணைத்தலைவர் அரவிந்தன், செயலாளர் ராஜலிங்கம், வெள்ளாளன்விளை பஞ்சாயத்து தலைவர் ராஜரத்தினம், நூறு நாள் வேலைவாய்ப்பு திட்ட அலுவலர் லதா, ஊர் நிர்வாகஸ்தர் தனபால், ஊர் தலைவர் ஆள்சாமி, விவசாய சங்க தலைவர் சந்திரசேகர், மன்ற உறுப்பினர் வெள்ளத்துரை, ஊர் கமிட்டியார் ராதிகா, நிர்மலா, கோயில் பூசாரி முத்துராமலிங்கம், சீவலூர் அரசு பள்ளி ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் ஊர்மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மரம் நடுதல் பணியில் ஈடுபட்ட மாணவியருக்கு தூத்துக்குடி மாவட்ட வாசிப்பு இயக்கத்தின் சார்பில் குலசேகரன்பட்டினம் அரசு பொது நூலக நூலகர் மாதவன், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் சாந்தா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் ஜான்சி ராணி, சாந்தா ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story