திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா


திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா
x
தினத்தந்தி 19 Oct 2023 12:15 AM IST (Updated: 19 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கம் சார்பில் பனை மர விதைகள் நடும் விழா நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் நாடார் வியாபாரிகள் சங்கத்தின் 14-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு எல்பாஸ் விழிப்புணர்வு இயக்கத்துடன் இணைந்து நிலத்தடி நீரினை பாதுகாத்திடும் வகையில் ஆவுடையார்குளத்தின் கரைகளில் பனை மர விதைகள் நடும் நிகழ்ச்ி நடந்தது. நிகழ்ச்சிக்கு, நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராசு நாடார் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, நகராட்சி ஆணையர் கண்மணி, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்கள் நபில் புஹாரி, ஜெகதீஸ்பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் குருச்சந்திரன் பனை மர விதைகளை நட்டி பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து, செந்தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மற்றும் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பனை விதைகளை நட்டனர்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில இணை செயலாளர் யாபேஷ், நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் செல்வின், துணை தலைவர் அழகேசன், துணை செயலர்கள் சத்தியசீலன், பாலகிருஷ்ணன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். எல்பாஸ் விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜ்கமல் நன்றி கூறினார்.


Next Story