திருச்செந்தூர் பி.ஜி.மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
திருச்செந்தூர் பி.ஜி.மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
ஆறுமுகநேரி:
திருச்செந்தூர் பி. ஜி. மருத்துவமனை சார்பில் ஆத்தூரை அடுத்துள்ள புன்னக்காயல் மீனவ கிராமத்திலுள்ள ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமினை துணை பங்குத்தந்தை செபஸ்டியான் அடிகளார் தொடங்கி வைத்தார்.
முகாமிற்கு புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார், கிராம பஞ்சாயத்து தலைவி சோபியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பொது மருத்துவம், நரம்பியல், மற்றும் மகளிர் நல மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆலோசனை, சிகிச்சை, மாத்திரை, மருந்துகள் வழங்கப்பட்டன.
முகாமில் பி.ஜி. மருத்துவமனை டாக்டர்கள் குகன் ராமமூர்த்தி, மலர்விழி, நிர்மல் ஆனந்த், விஸ்வநாதன், மரிய டானிப் ஜினோ மற்றும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக ஆத்தூர் டாக்டர் அய்யம்பெருமாள் கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ பரிசோதனை பிரிவை தொடங்கி வைத்தார்.
மேலும் நிகழ்ச்சியில் ஆத்தூர் டாக்டர் முத்துகிருஷ்ணன், ஆத்தூர் சங்கர் மருத்துவமனை டாக்டர்கள் பத்மநாபன், மற்றும் மாலதி பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.