தீவனப்பயிர் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து அதிகாரிகள் விளக்கம்


தீவனப்பயிர் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து  அதிகாரிகள் விளக்கம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தீவனப்பயிர் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

தூத்துக்குடி

தீவனப்பயிர் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்துஅதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.

இதுகுறித்து நெல்லை விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா, தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக்நூகு ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

தீவன பயிர்

விவசாய வளர்ச்சியில் விதைகள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கால்நடைகள் உற்பத்தியை மேம்படுத்துவதற்கு, விவசாயிகளுக்கு தேவையான தீவனப்பயிர் ரகங்களில் விதை உற்பத்தி செய்வது முக்கியமானது ஆகும். கால்நடை வளர்ப்பில் முறையான தீவன மேலாண்மை கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதுடன் கால்நடை வளர்ப்போர் அதிக லாபம் ஈட்டவும் துணைபுரிகிறது. முறையற்ற தீவன மேலாண்மை கால்நடைகளுக்கு சில உபாதைகளை ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்போருக்கு மிகுந்த பொருளாதாரா இழப்பையும் ஏற்படுத்துகிறது.

தொழில்நுட்பங்கள்

இதனால் தீவனப்பயிர் விதை உற்பத்தி செய்வதற்கு உயர் விளைச்சல் தரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும், ஒவ்வொரு பயிர் ரகங்களுக்கும் ஏற்ற சாகுபடி பருவத்தை கணடறிந்து சாகுபடி செய்ய வேண்டும். தேவையான அளவு வல்லுனர் மற்றும் ஆதார விதைகளை பயன்படுத்த வேண்டும். விதை உற்பத்திக்கு ஏற்ற சாகுபடி தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும். ரகத்தின் மரபுத்தூய்மையை பராமரிக்க போதுமான பயிர் விலகல் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும், ஒவ்வொரு ரகத்தின் மரபுத்தூய்மையை உறுதிப்படுத்த அவ்வப்போது கலவன் அகற்ற வேண்டும். நிலம் தேர்வு, விதைக்கும் பருவம், பயிரின் வளர்ச்சி, பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முந்தைய நிலைகளில் பயிர்களை கண்காணிக்க வேண்டும். சுத்தம் செய்த விதைகளை விதை நேர்த்தி செய்து முறையாக சேமிக்க வேண்டும். தானிய தீவனப்பயிர்களுக்கு போதுமான தழைச்சத்தும், பயறுவகை தீவனப்பயிருக்கு போதுமான மணிச்சத்தும் விதை நேர்த்தி செய்வதல் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விளைச்சலை அதிகரிக்கலாம்.

வேலிமசால் விதைகள் நன்றாக முளைக்க மிதமான வெந்நீரில் (3-4 நிமிடங்கள் ஆற வைத்தப்பின்) வேலிமசால் விதைகளை போட வேண்டும். 5 நிமிடங்கள் கழித்து நீரை வடித்து விட்டு விதையை நிழலில் உலர வைத்து விதைத்தால் அதிக முளைப்புத்திறனை பெறலாம். தானிய தீவனப்பயிரான மக்காசோளத்துக்கு 90 சதவீத விதை முளைப்புத்திறனும், சோளத்திற்கு 75 சதவீத முளைப்புத்திறனும், பயறு வகை தீவனப்பயிரான தட்டைப்பயறுக்கு 75 சதவீத விதை முளைப்புத்திறனும் இருக்க வேண்டும்.

பரிசோதித்து..

மேலும் விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை விதைக்கும் போது அந்த விதைகள் சரியான முளைப்புத்திறன் உடையவைதான என பரிசோதித்து விதைக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளை பரிசோதிக்க தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, ஒழுங்குமறை விற்பனை கூட வளாகத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தை அனுகலாம்.

இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story