விடுமுறையையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
விடுமுறையையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடத்தூர்
விடுமுறையையொட்டி கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடிவேரி அணை
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும். எனவே இங்கு குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், நாமக்கல், குமாரபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவர்.
குவிந்த சுற்றுலா பயணிகள்
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும், கோடை வெயில் தாக்கம் காரணமாகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர். அவர்கள் அங்கு அருவி போல் ஆர்ப்பரித்த கொட்டிய தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர். பின்னர் அங்குள்ள கடைகளில் விற்கப்பட்ட மீன் வறுவல்களை வாங்கி ருசித்தனர். மேலும் தாங்கள் கொண்டு வந்த உணவுப்பொருட்களை உறவினர்கள், நண்பர்களுக்கு பகிர்ந்து கொடுத்து உண்டு மகிழ்ந்தனர். பின்னர் அணைப்பகுதி பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ந்தனர்.