சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்


சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்- கலெக்டர் தகவல்
x

சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் கூறினார்.

மதுரை


சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சி களிலும் கிராம சபை கூட்டம் நடக்கிறது என கலெக்டர் கூறினார்.

கிராம சபை கூட்டம்

மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்டு 15-ந்தேதியன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கிராமசபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை ஒப்புதல் பெறுதல், தூய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) சுகாதாரம், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் போன்ற கூட்டப் பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

விவாதம்

இந்த கூட்டங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்வது முக்கிய கடமையாகும். மேலும், கிராம சபை விவாதங்களில் பயனாளிகள் தேர்வு மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே, மதுரை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story