ஈரோடு வளையக்கார வீதியில்அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வேட்பாளருடன் தீவிர பிரசாரம்


ஈரோடு வளையக்கார வீதியில்அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வேட்பாளருடன் தீவிர பிரசாரம்
x

ஈரோடு வளையக்கார வீதியில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வேட்பாளருடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஈரோடு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கதர் மற்றும் கிராம தொழில் வாரிய அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாநில தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் ஈரோடு வளையக்காரவீதி, வாணிபிள்ளையார் கோவில் வீதி உள்பட பல்வேறு வீதிகளில் திறந்த ஜீப்பில் சென்றபடி கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது வாக்காளர்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

அப்போது அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் சாக்கடை கால்வாய் வசதி, மின் விளக்கு வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான நிதியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கி உள்ளார். இதில் சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மற்ற பணிகள் அனைத்தும் தேர்தல் முடிந்தவுடன் தொடங்கப்படும். திருமகன் ஈவெரா விட்டுச்சென்ற பணிகளை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தொடர நீங்கள் அனைவரும் தவறாமல் கை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றி பெற்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் மேலும் பல்வேறு பணிகளை சிறப்பாக செயல்படுத்துவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் செல்வபெருந்தகை, அப்துல் வஹாப், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மாநகர செயலாளர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story