சேராப்பட்டு சாலையில் சேதமான தடுப்பு கம்பியை சீரமைக்க வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை


சேராப்பட்டு சாலையில்  சேதமான தடுப்பு கம்பியை சீரமைக்க வேண்டும்  வாகன ஓட்டிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Dec 2022 12:15 AM IST (Updated: 9 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சேராப்பட்டு சாலையில் சேதமான தடுப்பு கம்பியை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு,

மூங்கில்துறைப்பட்டு அடுத்த புதூர் பகுதியில் இருந்து சேராப்பட்டு செல்லும் சாலை வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் சாலையின் வளைவு பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையில், தடுப்பு கம்பி அமைக்கப்பட்டிருந்தது. இந்த தடுப்பு கம்பி திடீரென உடைந்து விழுந்தது. ஆனால் இதை அதிகாரிகள் சரிசெய்யவில்லை. இதனால் இரவு நேரங்களில் அவ்வழியாக வாகனங்களில் செல்லும்போது, தவறி கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அதிக அளவில் விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில் சாய்ந்து கிடக்கும் தடுப்பு கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story