சமூகவலைதளத்தில்முஸ்லிம்கள் குறித்து அவதூறு பதிவு
சமூகவலைதளத்தில் முஸ்லிம்கள் குறித்து அவதூறு பதிவு செய்யப்பட்டு இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளி முதியவர் ஒருவரை, ஒரு நபர் பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது போன்றும், அந்த நபர் முதியவர் தாடி வைத்து இருப்பதை சுட்டிக்காட்டி முஸ்லிம் சமுதாயத்தை அவதூறாக பேசுவது போன்ற வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.
இதனைதொடர்ந்து தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் அகமது இக்பால் தலைமையில் திராவிடர் விடுதலை கழக பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா சந்தனராஜ், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் முகம்மது ஜான், மாவட்ட தலைவர் செய்யது சம்சுதீன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத் மற்றும் நிர்வாகிகள் மத்திய பாகம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தனர். அதில், முஸ்லிம்கள் பற்றி அவதூறாக பேசிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.