சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய மர்ம நபர்கள்


சமூக வலைத்தளங்களில்  பெண்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 4 Nov 2022 12:15 AM IST (Updated: 4 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் சமூக வலைத்தளங்களில் பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி

தேனி பகுதியை சேர்ந்த 32 வயது பெண் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவர், தேனி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், "அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எனது பெயரில் பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கினார். அதை பயன்படுத்தி எனது கணவரின் நண்பருடைய மனைவியின் செல்போன் எண்ணை பெற்று இருக்கிறார். பின்னர் அவருடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவருக்கே அனுப்பி வைத்தார். அதுகுறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதுபோல், அதே பேஸ்புக் கணக்கில் இருந்து மற்றொரு பெண்ணின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தார். எனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் பயன்படுத்தி, எனது புகைப்படத்தையும், மேலும் சில பெண்களின் புகைப்படத்தையும் ஆபாசமாக சித்தரித்து பலருக்கும் மர்ம நபர் அனுப்பி உள்ளார். இதனால், எனக்கும், எனது கணவருக்கும் இடையே பிரச்சினை ஏற்படுகிறது. பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் எனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அனுப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story