வரும் 20ஆம் தேதி... அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு


வரும் 20ஆம் தேதி... அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2023 3:08 PM IST (Updated: 12 May 2023 3:17 PM IST)
t-max-icont-min-icon

திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உயர்நிலை செயல்திட்ட குழுக்கூட்டம் வரும் 20ம் தேதி நடைபெறும் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்துவது தொடர்பாகவும் , ஜனாதிபதி திரவுபதி முர்முவின் தமிழக வருகை , நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.


Next Story