வருகிற 20-ந் தேதிகவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்
வருகிற 20-ந் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் எனதமிழ்நாடு காராஜர் நாடார் சமுதாய நல சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு காமராஜர் நாடார் சமுதாய நல சங்கம் மாநில தலைவர் எம். சுரேஷ்குமார் நாடார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு சட்டமன்றத்தில் காவனர் தனது உரையில் பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், முன்னணி தலைவர்கள் பெயர்களையும் குறிப்பிடாமல் பேசியது மிகவும் கண்டனத்திற்குரியதாகும். தமிழ்நாட்டில் 9ஆண்டுகாலம் முதல்-அமைச்சராக இருந்து மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாய் வைத்து, நேர்மையான அரசியல், கல்வி. விவசாய வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து, தமிழக அரசியல் வரலாற்றில் தனி இடம் பிடித்தவர் காமராஜர். அப்படிப்பட்ட தலைவர் பெயரை கவனர் உரையில் கூறாததை கண்டித்து வருகிற 20-ந்தேதி சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தில் சங்க நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்து கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.